தமிழ்நாடு

அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்த ஓ.பி.எஸ் உறவினர்- கிணற்றை மூடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் !

அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை விற்பனை செய்துவந்ததால் ஆழ்துளை கிணற்றை மூடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது துணை முதல்வரின் உறவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்த ஓ.பி.எஸ் உறவினர்-  கிணற்றை மூடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை, குன்றத்தூரில் போஸ் என்பவர் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்வதாக வந்த புகார் வந்ததுள்ளது. இதனையடுத்து குன்றத்தூர் வட்டாச்சியர், துணை வட்டாச்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவிகள் போன்ற அரசு அதிகாரிகள் புகார் வந்த இடத்திற்கு ஆய்வு செய்தனர்.

அப்போது ஆழ்துளை கிணறில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து லாரிகளில் நிறப்புவதும், 3 லாரிகள் வரிசையில் நிர்ப்பதும் உறுதியனது. இதனை அடுத்து நிலத்தடி நீரை விற்பனை செய்வதற்கு லைசன்ஸ் இருக்கிறதா என்று அரசு அதிகாரிகள் கேட்டபோது, நிலத்தடிநீரை விற்பனை செய்யும் போஸ் என்பவர் அரசு அதிகாரிகள் என்றுகூட பார்க்காமல் உருட்டுக் கட்டையால் அடித்தும் தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார்.

அப்போது உடன் வந்த போலிஸார் பேச்சுவார்தை நடத்தினார்களே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை அடுத்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் என்பவர் நடந்தவற்றை புகார் எழுதினார்.

அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்த ஓ.பி.எஸ் உறவினர்-  கிணற்றை மூடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் !

அதில், “நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தபோது போஸ் என்பவர் தண்ணீரை லாரிகள் மூலம் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. உடனே ஆழ்துளை கிணறை மூடி சீலிட நடவடிக்கை மேற்கொண்டபோது அரசு அதிகாரிகளை தாக்கியும் தகாதவார்தைகளால் திட்டி பணிசெய்யவிடாமல் இடையூறு செய்த போஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், சம்பவம் நடந்து மூன்றுநாள் ஆகியும் குன்றத்தூர் காவல்நிலைய போலிஸார் போஸ் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் போஸ் தேனி பகுதியை சேர்ந்தவர் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் என்றும் கூறப்படுகிறது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் என்பதால் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் திட்டியும் உருட்டுக்கட்டையால் தாக்கிய போஸ் மீது நடவடிக்கை எடுக்காமல் குன்றத்தூர் போலிஸார் மௌனம் காத்துவருகின்றனர் எனபது வேதனையாக உள்ளதாக அரசு ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories