தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர் - ஈரோட்டில் நடந்த சோக சம்பவம்!

கொரோனா தடுப்பு பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர் - ஈரோட்டில் நடந்த சோக சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாப்பேட்டை அருகில் உள்ள நெருஞ்சி பேட்டையை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் பாலன். இவர் கடந்த 13 ஆண்டுகளாக நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் இவர் 7ம் தேதி வியாழன் காலை பவானி மேட்டூர் சாலையில் நெருஞ்சிப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவில், கொரோனா தடுப்பு பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட சக பணியாளர்கள் பேரூராட்சியின் குப்பை வண்டியில் அவரை ஏற்றிக்கொண்டு அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள பணியாளர்கள் பாலனை பரிசோதித்தனர். அதில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சக தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories