கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையோர மாவட்ட மக்கள் அண்டை மாநிலங்களுக்கு கூட்டமாகச் செல்வதைத் தடுக்கும் விதமாக தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் பின்வருமாறு :
* தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.
* மதுக்கடைகளில் தனிநபர் இடைவெளி ஆறு அடி தூரமாக இருக்க வேண்டும்.
* டாஸ்மாக்கில் தேவைக்கு ஏற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை.
* பார்கள் திறக்கப்பட அனுமதி இல்லை.