தமிழ்நாடு

பசி கொடுமை தாங்க முடியாமல் கணவன் - மனைவி தற்கொலை : கொரோனா ஊரடங்கால் தொடரும் கொடூரம்!

ஊரடங்கால் வேலையின்றி, வருமானமின்றி பசி தாங்க முடியாமல் நாகை மாவட்டம், திருக்குவளையைச் சேர்ந்த கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசி கொடுமை தாங்க முடியாமல் கணவன் - மனைவி தற்கொலை : கொரோனா ஊரடங்கால் தொடரும் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை பகுதி, பெரிய வடக்குவெளி ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் வே.துரைசாமி, விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு சுதாகர் எனும் மகனும் இளமதி எனும் மகளும் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னர், மகனும் மகளும் தனிதனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்டுத்தப்பட்டுள்ளதால் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மகன் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து தாய், தந்தையை பார்த்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுச் செல்வாரம்.

இந்நிலையில் மகனும் பணமில்லாமல் சிரமம் அடைவதைக் கண்டு இனியாருக்கும் பாராமாக இருக்கக்கூடாது என நினைத்து இருவரும் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டனர்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலை கிடைக்காமல், வறுமையில் வாடிய துரைசாமி- நாகம்மாள் தம்பதியர், வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் மக்களைக் கொல்கிறதோ இல்லையோ, வறுமை இவர்களைக் கொன்றுவிட்டது என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories