தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் சொல்லும் எடப்பாடி : உண்மை எண்ணிக்கையை அரசு அறிவிக்குமா? #Lockdown

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமலேயே தமிழகத்தில் நுழைந்துள்ளனர்.

வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் சொல்லும் எடப்பாடி : உண்மை எண்ணிக்கையை அரசு அறிவிக்குமா? #Lockdown
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வெளிமாநிலத் தொழிலாளர்கள் 1.34 லட்சம் பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மை நிலவரம் எடப்பாடி பழனிசாமி கூறிய அந்த எண்ணிக்கை பொய் என்பதையே காட்டுகிறது. காரணம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் வட மாநிலத் தொழிலாளர்கள் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் பார்த்தால் தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்க வாய்ப்புள்ளது. சென்னையில் மட்டுமே லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் சொல்லும் எடப்பாடி : உண்மை எண்ணிக்கையை அரசு அறிவிக்குமா? #Lockdown

ஆனால் அரசு 1.34 லட்சம் பேர் என்று சொல்வது அபத்தமாக உள்ளது. பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை மட்டுமே அரசு கணக்கு காட்டுகிறது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமலேயே தமிழகத்தில் நுழைந்துள்ளனர்.

அவர்களை இந்த அரசு திட்டமிட்டு மறைக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு அரசு எவ்விதமான உதவிகளைச் செய்து வருகிறது எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories