கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் விதமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வரும் நபர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பாடி மேம்பாலத்தில் பெருமளவில் வாகனங்களில் மக்கள் பயணித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், போலிஸார் வாகன ஓட்டிகளின் அடையாள அட்டையினை சோதனை செய்து அவசர தேவைகளுக்காகச் செல்பவர்களை மட்டும் அனுப்பி வைத்தார்கள்.
மேம்பாலத்தின் மூன்று புறமும் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் வாகனங்களில் பயணித்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.