தமிழ்நாடு

“தயவு செய்து வெளியே வராதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன்” -வாகன ஓட்டிகளிடம் கண்கலங்கிய டிராஃபிக் போலிஸ்

ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என சென்னை அண்ணாசாலையில் வாகன ஓட்டிகளிடம் கண்ணீர் விட்டு வேண்டுகோள் விடுத்த போக்குவரத்து காவலர்.

“தயவு செய்து வெளியே வராதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன்” -வாகன ஓட்டிகளிடம் கண்கலங்கிய டிராஃபிக் போலிஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாமாக மார்ச் 24, நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் வைரஸ் தொற்று குறித்த வீரியம் அறியாமல் இளைஞர்கள் பலர் சாலைகளில் திரிவதை காணமுடிகிறது.

அதேபோல, வெறிச்சோடி கிடக்கும் சாலைகளை காணவும் கார்கள், பைக்குகளில் சென்று பார்வையிட்டு போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். இதனால் போலிஸார் பல்வேறு வகையில் கெடுபிடிகளை கடைபிடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

“தயவு செய்து வெளியே வராதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன்” -வாகன ஓட்டிகளிடம் கண்கலங்கிய டிராஃபிக் போலிஸ்

தெலங்கானா மாநிலத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என கடுமையாக அம்மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாஸா அருகே வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவலர் ஒருவர் வீட்டிலேயே இருக்கும் படி மன்றாடி கேட்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், “நம்ம நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும், நம்ம உயிரை பாதுகாக்கவும் வீட்டிலேயே இருங்கள். வீட்டை விட்டு தயவு செய்து வெளியே வராதீர்கள். உங்கள் கால்களில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். இந்த வைரஸ் குறித்த சீரியஸ்நெஸ் தெரியாம இருக்காதீங்க" என கண்கலங்கி பேசியுள்ளார்.

“தயவு செய்து வெளியே வராதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன்” -வாகன ஓட்டிகளிடம் கண்கலங்கிய டிராஃபிக் போலிஸ்

இது ஒருபுறம் இருந்தாலும், சில பகுதிகளில் சாலைகளில் நடமாடும் மக்களை கண்டதும் தோப்புக்கரணம் போடச்சொல்வது, வழக்குப்பதிவு செய்வது என போக்குவரத்து போலிஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆகவே கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பரவாமல், மனித இனம் அழியாமல் பாதுகாக்க இந்த social distancing முறையை அனைவரும் கடைபிடித்தால் மட்டுமே உயிர்ப்பிக்க முடியும் என தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

வாகன ஓட்டிகளிடம் கெஞ்சிய போக்குவரத்து காவலர்:

வாகன ஓட்டிகளிடம் கெஞ்சிய போக்குவரத்து காவலர்
“தயவு செய்து வெளியே வராதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன்” -வாகன ஓட்டிகளிடம் கண்கலங்கிய டிராஃபிக் போலிஸ்
“தயவு செய்து வெளியே வராதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன்” -வாகன ஓட்டிகளிடம் கண்கலங்கிய டிராஃபிக் போலிஸ்
“தயவு செய்து வெளியே வராதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன்” -வாகன ஓட்டிகளிடம் கண்கலங்கிய டிராஃபிக் போலிஸ்
“தயவு செய்து வெளியே வராதீர்கள்; காலில் விழுந்து கேட்கிறேன்” -வாகன ஓட்டிகளிடம் கண்கலங்கிய டிராஃபிக் போலிஸ்
banner

Related Stories

Related Stories