இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அரசுடன் இனைந்து மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் இரவு பகலாக கடினாம உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிகப்படியான நேரங்கள் உழைக்கும் அவர்களுக்கு பணியில் மத்தியில் மற்றொரு பெரிய பிரச்சனையை சந்திப்பதாக கவலையுடம் தெரிவித்துள்ளனர். அதாவது, கொரோனா அச்சம் காரணமாக கொரோனா சிகிச்சை அளிப்பதால் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் தங்களை வீட்டில் இருந்து வெளியேறும் படி கட்டாயப்படுத்துக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடித்ததில், “கொரோனா மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ துறைச் சார்ந்த ஊழியர்களால் கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தால் தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந் தங்களை வெளியேறும்படி வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
பலரைக் கட்டாயப்படுத்தி, வீட்டைக் காலி செய்துள்ளனர். வாடகை வீட்டில் வசித்துவந்த மருத்துவர்கள் தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். இத்தகைய மோசமான செயலைக் கண்டிக்கின்றோம். அதேவேலையில், மருத்துவ துறையில் பணியாற்றும் ஊழியர்களை வீட்டின் உரிமையாளர் வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக உத்தரவு ஒன்றை அரசு கொண்டுவரவேண்டும்.
அதுமட்டுமின்றி, நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல ஊழியர்கள் வீட்டில் இருந்து மருத்துவனைக்கோ, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கோ செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். அதனால், உரிய வாகன வசதியை ஏற்படுத்தவேண்டும். இந்த பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு வருவதன் மூலம் ஒய்வின்றி உழைக்கும் எங்களது சேவையை உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரையடுத்து , மருத்துவத்துறை ஊழியர்களை வீட்டைக் காலி செய்ய கட்டாயப்படும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் டெல்லி மாநகர காவல் ஆணையாளருக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.