கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கே.எஸ்.ஆர்.டி.சி அரசு சொகுசுப் பேருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அதேநேரத்தில் கோவை மாவட்டத்தில் சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்ருந்தது.
அப்போது லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் கண் அயர்ந்ததாகத் தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளில் மோதி எதிர்வழித்தடத்தில் வேகமாக வந்த பேருந்தின் மீது மோதியுள்ளது.
பேருந்தின் வேகம் மற்றும் கன்டெய்னர் லாரியின் எடை காரணமாக லாரி மோதியதில் பேருந்தின் ஒரு பகுதியே முற்றிலும் சிதைந்துபோனது.
இதில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுக்காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சற்று முன்பு பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரைத் தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி வியஜன் விசாரித்து வருகிறார்.