தமிழ்நாடு

தமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஆணை!

மின்சார துறை கேங்மேன் பணிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

தமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.

இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை, சில தொழிற்சங்கங்கள், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மின்துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

தமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஆணை!

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் மனுவை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரரின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

banner

Related Stories

Related Stories