தமிழ்நாடு

பல இடங்களில் தி.மு.க வெற்றி: அ.தி.மு.கவினரின் அழுத்தத்தால் மறைமுக தேர்தலை மீண்டும் ஒத்திவைத்த அதிகாரிகள்!

பல இடங்களில் தி.மு.க வெற்றி பெறும் சூழலில் இருப்பதால், ஆளுங்கட்சியினர் அழுத்தத்தின் பேரில், மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் தி.மு.க வெற்றி: அ.தி.மு.கவினரின் அழுத்தத்தால் மறைமுக தேர்தலை மீண்டும் ஒத்திவைத்த அதிகாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு வகையான முறைகேடுகளில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் மறைமுக தேர்தலிலும் ஆள்கடத்தல் போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, முறைகேடு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 41 ஊராட்சி ஒன்றியத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் 266 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட 335 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பல இடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

பல இடங்களில் தி.மு.க வெற்றி: அ.தி.மு.கவினரின் அழுத்தத்தால் மறைமுக தேர்தலை மீண்டும் ஒத்திவைத்த அதிகாரிகள்!
Admin

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய குழுத் தலைவர், தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்றது.

மேலும், பல இடங்களில் தி.மு.க வெற்றி பெறும் சூழலில் இருப்பதால், ஆளுங்கட்சியினர் அழுத்தத்தின் பேரில், மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories