மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் மறைமுகத் தேர்தல் சட்ட முன்வடிவை எதிர்த்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு பேசுகையில், “மறைமுகத் தேர்தல் மற்றும் 9 மாவட்டங்களில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படவேண்டும். காலநீட்டிப்பு ஏற்படுவதால் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
கிராம ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ஒப்பந்தம் எடுத்து செப்பனிடுகிறீர்கள். ஆனால் நிறைய கிராம சாலைகளைச் செப்பனிட வேண்டும். என்னுடைய தொகுதியிலே இதுபோல நிறைய சாலைகளை செப்பனிட வேண்டியிருக்கிறது.
- சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்
அடுத்த தேர்தலில் என்ன ஆகும் என்பது முதல்வருக்கே தெரியும்!
வரும் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என முதல்வர் பேசுகையில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், அடுத்த தேர்தல் என்ன ஆகும் என்பது அவருக்கே தெரியும். ஆனால் தைரியமாக பேசியிருக்கிறார் எனத் தெரிவித்தார்.
மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான நேரடி தேர்தலை ரத்து செய்ததையடுத்து, மறைமுக தேர்தலில் நடத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பித்தது. அதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அஞ்சுகிறது; மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாத அடிமை அரசாகவே அதிமுக உள்ளது என தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவராததால் சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னகுணம், மணம் பூண்டி நியாயவிலைக் கடைகளை பிரித்து பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலமைச்சரின் சிறப்பு கவனத்திற்கு கொண்டுச் சென்று இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள ஐஐடி நிறுவனத்தின் 3வது நுழைவு வாயிலை மாணவர்கள் நலன் கருதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் வாகை சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கருணாமூர்த்திக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
ஆளுநரின் உரையில் அரசின் கொள்கையும், கோட்பாடும் எதுவும் சொல்லப்படவில்லை. அரசின் செய்தி வெளியீடு போல இருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் இந்த ஆளுநர் உரையில் சொல்லப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரம் அத்திவரதர், திருவண்ணாமலை தீபம், மாமல்லபுரம் பிரதமர் சந்திப்பு, காந்தி அடிகளின் பிறந்த நாள், ராஜாஜி நினைவு தினம், ஒரே நாடு ஒரே அட்டை என ரயில்வே கையேடு போல இந்த ஆளுநர் உரை இருக்கிறது. - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் தான் நடைபெற்றது. இன்னும் 9 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் டிஸ்டிங்ஷன் பெறுவோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் மதுபானம் விற்பனை குறைப்போம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக மது விற்பனை பன்மடங்கு அதிகரித்தது. மதுபானை ஒழிக்க நடவடிக்க எடுக்கப்படுமா? - காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர். ராமசாமி கேள்வி
நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர். ராமசாமி கேள்வி
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பொதுக்குழுவிலும் நீட்டை தமிழகத்தில் இருந்து விலக்கு அளிக்க இந்த அரசு முயற்சி செய்யும் என தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இன்னும் ஏன் தாமதம்? நாங்கள் தும்பை விட்டு வாலைப் பிடிக்க வில்லை நீங்கள்தான் தும்பை விட்டு வாலைப் பிடித்து உள்ளீர்கள்.என்று பதிலளித்தார்..
முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நீட் தமிழகத்தில் தலைதூக்க வில்லை ஆனால் இப்போது நீட் தமிழகத்தில் உள்ளே நுழைந்ததும் யார் காரணம் அதற்கு நீங்கள்தான் காரணம் என்றார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீர் பிரச்சினைக்காக வழக்குப் போட்டு இருக்கிறீர்கள், போட்ட வழக்கில் என்ன சாதிக்கப் போகிறீர்கள் இதுகுறித்து அமைச்சர் தெளிவான பதிலை தர வேண்டும். - தி.மு.க எம்.எல்.ஏ துரைமுருகன் பேச்சு
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கூண்டூர் ஊராட்சியில் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பலமுறை இதே சட்டமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன்.
அமைச்சர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பலமுறை தெரிவித்தார். முதலமைச்சர் உற்சாகமாக இருக்கும் பொழுது அமைச்சர் இதை தெரிவித்து எங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஏற்படுத்தித்தர முன்வர வேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் 138 பள்ளிகளில் யோகா பயிற்சி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. கோவையிலிருந்து பயிற்சி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஓட்டுநர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் யோகா பயிற்சி தி.மு.க ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் யோகா பயிற்சி வழங்கப்படுவதில்லை அந்த பயிற்சி யோகப் பயிற்சி அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தி.மு.க சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வழியுறுத்தினார்.
ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த அரசு ஆவணம் செய்யுமா என கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கேள்வி எழுப்பினார்...
வெங்காயம் உரித்தால் ஒன்றுமில்லையோ அதேபோல் ஆளுநர் உரையின் ஒன்றுமே இல்லை. விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது குறிப்பாக வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உயர்ந்துகொண்டே போகிறது குறைந்தபாடு இல்லை. தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கு முன் வரவும் இல்லை.
வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கரும்புக்கு உரிய பணம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வருவாய்த்துறை முறையாக நிதி வழங்குவது இல்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர்.
- தி.மு.க எம்.எல்.ஏ பிச்சாண்டி.
சபாநாயகர் திடீரென அவரை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்த போது உடனே அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை வாசித்திருப்பதை பார்க்கும்போது இதை ஏற்கனவே திட்டமிட்டு செயல்படுத்தியது போல் தெரிவதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
ஆளுநர் உரையை கிழித்தது மட்டுமல்லாமல் சபாநாயகர் இருக்கை அருகே அதை வீசிய காரணத்தால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
அரசின் செயல்பாட்டை விமர்சித்த ஜெ.அன்பழகனை சஸ்பெண்ட் செய்தது ஏன் என தி.மு.க தலைவர் கேள்வி!
அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக ஜெ.அன்பழகன் அடுத்த கூட்டத்தொடர் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
அரசின் செயல்பாட்டை விமர்சித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதலிடம் பெற்றது தொடர்பாக ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ பேசியதைத் தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
மற்ற மதங்களை ஏற்கும் போது இலங்கை தமிழர் மற்றும் சிறுபான்மை மக்கள் ஒதுக்கியது ஏன்? மற்ற ஆதரவு மாநில முதல்வர்களை போல் தைரியமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். துரைமுருகன் வலியுறுத்தல்.
நாடு முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது. பல மாநில முதல்வர்கள் ஏற்கவில்லை. அ.தி.மு.க கட்சியை சேர்ந்த அன்வர்ராஜா கூட சில கருத்துக்களை கூறியிருக்கிறார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க ஏன் வாக்களித்தது பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
புதுக்கோட்டையில் மாவட்ட தேர்தல் அதிகாரியை மேடையிலேயே ஒரு அமைச்சர் திட்டுவது சட்டம் ஒழுங்கு சீர்கேடு இல்லையா? இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று முதல் இடம் யார் கொடுத்தது? நீங்களே எழுதி கொடுத்து வாங்கியதா என்று தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.க அரசு மெக்கா செல்வதற்காக சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். அதே அ.தி.மு.க அரசுதான் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக #CAA ஆதரித்து வாக்களித்து உள்ளார்கள். இது நியாயமா என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
புதுக்கோட்டையில் மாவட்ட தேர்தல் அதிகாரியை மேடையிலேயே ஒரு அமைச்சர் திட்டுவது சட்டம் ஒழுங்கு சீர்கேடு இல்லையா? இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று முதல் இடம் யார் கொடுத்தது? நீங்களே எழுதி கொடுத்து வாங்கியதா என்று ஜெ.அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
மோடி எங்களுடைய டாடி என்று சொல்லும் நிலையில் மத்திய அரசுக்கு அடிமையாக அதிமுக அரசு செயல்படுகிறது.
சபாநாயகர் பதிலில் திருப்தி இல்லாத சூழலில் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அபுபக்கர் பேட்டியளித்துள்ளார்.
ஆய்வு செய்து தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற பொன்னான வார்த்தையை சொல்லிவிட்டால் நாங்கள் அமைதியாகிவிடுவோம் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்றவாறு இல்லை.
சபை இன்னும் இரண்டு நாட்களே நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும். நாடே பற்றி எரிகிறது. #CAA-வுக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திப் பேசினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வரும் நிலையில் சபாநாயகர் பேச அனுமதி மறுத்து வருகிறார்.
பரமத்தி வேலூர் தொகுதி, கபிலர்மலை ஒன்றியம், திடுமல் ஊராட்சி நாகப்பாளையத்தில் அரசு விதியை தளர்த்தி மக்கள் பயன்பாட்டுக்காக நியாயவிலை கடையை அந்தப் பகுதியிலேயே அமைக்க அரசு முன் வருமா என்று பரமத்தி வேலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கி மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்திற்கு உறுதுணையாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் நூலகம் அமைக்க இடம் தான் பிரச்னையாக உள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை கொண்டு வர உடனடியாக அரசு இடத்தை வழங்க வேண்டும் என திருப்பரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் கோரிக்கை விடுத்தார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 9-ந் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு. இந்த மூன்று நாட்களில் ஆளுநர் உரையின் மீது விவாதம் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வர உள்ளனர்.
சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தி.மு.க சட்டமன்ற கொறடா சக்கரபாணி மற்றும் பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கே.ஆர்.ராமசாமி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆகியோர் அலுவல் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரையில் சொல்லவில்லை. ஆளுநர் உரையை முழுமையாக கேட்ட பிறகு வெளிநடப்பு செய்ததாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் தனியரசு எம்.எல்.ஏ பேட்டியளித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை!
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து தமிழுன் அன்சாரி எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்தார்.
முன்னதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிம்முன் அன்சாரி சட்டப்பேரவையில் தேசியக் கொடியை காண்பித்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்
தி.மு.கவைத் தொடர்ந்து காங்கிரஸ், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூ.முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.