குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்தது ‘பேரணி இல்லை; போர் அணி’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க தலைமையிலான பேரணியில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் கலந்துக் கொண்டனர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க தலைமையிலான பேரணியில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்பு!
“பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களைப் பிரிக்காதே” என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் முழக்கம்!
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க தலைமையிலான பேரணியில் இந்திய மாணவர் சங்கம் பங்கேற்பு. மாணவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்காணோர் அணிவகுப்பு!
பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க. தலைமையில் மாபெரும் கண்டன பேரணி தொடங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள பேரணிக்கு சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் பேரணி நடக்கிறது. பேரணியில் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பேரணிக்கு பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர், மாணவர்கள் ஆதரவு பெருகியுள்ளது. பேரணியில் லட்சக்கணக்கானோர் திரள்வதால் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.