தமிழ்நாடு

“சிலை திருட்டு வழக்கில் முழு உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சிலைத் திருட்டு வழக்கில் புதிய விசாரணை அதிகாரி, அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“சிலை திருட்டு வழக்கில் முழு உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பா் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவரை மேலும் ஓராண்டுக்கு சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது சென்னை உயா்நீதிமன்றம்.

அதன்படி, அவரது பதவிக்காலம் கடந்த நவம்பா் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த டிசம்பர் 3ம் தேதி வெளியிட்டது.

இதையடுத்து, சிலை கடத்தல் வழக்கு தொடா்பான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்கவில்லை.

“சிலை திருட்டு வழக்கில் முழு உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஒரு வாரத்தில் சிலை கடத்தல் வழக்குகள் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, பொன் மாணிக்கவேல் தன்னிடமிருந்த 17,790 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி அபய்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா்.

இந்நிலையில், சிலைத் திருட்டு வழக்கில் புதிய விசாரணை அதிகாரி, அரசியல் அழுத்தம் எதற்கும் ஆட்பட்டு விடாமல், உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகக் கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த காவல்துறை உயரதிகாரி, இந்த விவகாரத்தில் அ.தி.மு.க அமைச்சர்களையும் குற்றம்சாட்டி இருந்தார்.

தற்போது நீதிமன்ற உத்தரவின்படி அவர் தன்னிடமிருந்த சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.ஜி.பி-யிடம் ஒப்படைத்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரி, அரசியல் அழுத்தம் எதற்கும் ஆட்பட்டு விடாமல், சிலைத் திருட்டு வழக்கில் உள்ள முழு உண்மைகளையும், தமிழக மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories