தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போரட்டத்தில் ஈடுப்பட்ட அசாம் இளைஞர்கள்!

குடியுரிமை சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போரட்டத்தில் ஈடுப்பட்ட அசாம் இளைஞர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பா.ஜ.க அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை மசோதாவை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கூடி போராட்டம் நடத்த முயற்சித்தனர். அதற்கு அனுமதி மறுத்த போலிஸார், மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களை எச்சரித்தனர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போரட்டத்தில் ஈடுப்பட்ட அசாம் இளைஞர்கள்!

பின்னர், அவர்களை வாகனத்தில் ஏற்றி சென்று வள்ளுவர் கோட்டத்தில் இறக்கிவிட்டனர். மேலும் அங்கு போராட்டம் நடத்திக் கொள்ள அசாம் மாநில இளைஞர்களுக்கு அனுமதி அளித்தனர்.

இதனையடுத்து அங்கு 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்தை புறக்கணிக்கும் வகையிலும் உள்ள பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories