புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைக்கிணங்க, வேலூர் மாவட்ட இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தி.மு.க இளைஞரணி சார்பில் மண்டல பொறுப்பாளர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் மாவட்ட பொறுப்பாளர் இராமகிருஷணன் ஆகியோரின் ஆலோசனைப்படி இன்று தேனியில் நேரு சிலை அருகில் புதிய திருத்த குடியுரிமை சட்ட மசோதா நகலினை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் தலைமையில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே குடியுரிமை சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி சார்பில், பூவிருந்தவல்லியை அடுத்த குமணன் சாவடியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான இளைஞரணியினர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் அணியினர் உதகை ஏடிசி திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்க்கு எதிராக பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட இளைஞரணி சார்பாக மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
குடியுரிமை சட்டம் நிறைவேறியதை கண்டித்து விழுப்புரம் இளைஞரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய குடியுரிமை சட்ட நகலினை கிழித்து மாவட்ட அமைப்பாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் ரஜினிசின்னா ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தினர் பலர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்தினை கண்டித்து தலைமை தபால்நிலையம் முன்பு புதிய குடியுரிமை சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் புதிய குடியுரிமை சட்டநகலை கிழிக்கும் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில் தலைமையில் பா.ஜ.க அரசு நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்ட நகலை கிழித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக விருத்தாசலத்தில் நடைபெற்ற வேற்றுமையில் ஒற்றுமை என்கின்ற இந்திய பண்பாட்டை சிதைக்கும் விதமாக கொண்டுவரப்படும் மத்திய அரசின் இந்திய குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதை எதிர்த்து சட்ட நகலை எரித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் குடியுரிமை சட்ட மசோதா திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி மாவட்ட இளைஞரணி சார்பில் கண்டனம் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
'இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் பா.ஜ.க – அ.தி.மு.க அரசுகள் கொண்டு வந்துள்ள #CAB2019 மசோதாவை கிழித்தெறிந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை சைதாபேட்டையில் ஆயிரக்கணக்கான தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவை கிழித்தெறிந்து போராட்டம் நடத்தினர்.