தமிழ்நாடு

வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்த 112 சவரன் நகைகள் கொள்ளை : கன்னியாகுமரியில் கொள்ளையர்கள் துணிகரச் செயல்!

கன்னியாகுமரியில் வீட்டில் குழிதோண்டி புதைத்து வைத்திருந்த 112 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்த 112 சவரன் நகைகள் கொள்ளை : கன்னியாகுமரியில் கொள்ளையர்கள் துணிகரச் செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் செக்குவிளை பகுதியைச் சேர்ந்த ராஜய்யன் - ராஜம்மாள் தம்பதியரின் வீட்டில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜய்யன் தனது மகள் ஜெபா மற்றும் மனைவிக்குச் சொந்தமான 112 பவுன் நகைகளை, திருடர்களுக்கு பயந்து, வீட்டில் உள்ள தனது அறையிலேயே குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

திரும்பி வந்து பார்த்தபோது, அறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை, மர்மநபர்கள் தோண்டி எடுத்து திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜய்யன், போலிஸில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories