சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகளுடன் நுரை உருவாகி ஒதுங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பகுதியில் இருக்கும் ஆலைகளில் இருந்து கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகளால் சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மூன்று நாட்களாக நச்சுக்கழிவு நுரை கரை ஒதுங்கி வருகிறது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் இயங்கிவரும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், ரசாயன கழிவுநீரை உரிய முறையில் பூமிக்கு அடியில் சேமித்து சுத்திகரிக்காமல் கால்வாய் வழியாக வெளியேற்றி வருகின்றன. இப்படி வெளியேற்றப்படும் நீர் மழைக்காலங்களில் கடலில் கலந்து விடுகிறது.
இதனால், மூன்று நாட்களாக பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரைப் பகுதிகளில் நச்சுக்கழிவு நுரைக் குவியலாக கரை ஒதுங்கி வருகிறது. இது அப்பகுதிக்கு வருவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டிலும் இதேபோன்று கடல் அலைகள் நுரையுடன் எழுந்தன. கடந்தாண்டு இதுபோன்று எழுந்தபோது, மாசுக்களால் பருவ மழைக்கு முன்பு இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.