தமிழ்நாடு

தென் மாநில ரயில்வேயில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்... மாநில வாரியாக தேர்வு நடத்த ஆ.ராசா MP கோரிக்கை!

இந்தியில் ரயில்வே தேர்வு நடத்துவதை விடுத்து மாநில வாரியாக ரயில்வே போட்டித் தேர்வுகள் நடத்தவேண்டும் என்று மக்களவையில் தி.மு.க எம்.பி., ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.

தென் மாநில ரயில்வேயில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்... மாநில வாரியாக தேர்வு நடத்த ஆ.ராசா MP கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசா பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்திய ரயில்வே காலிப் பணிக்காக நடைபெறும் தேர்வுகளை இந்தியில் நடத்துவதைத் தவித்துவிட்டு மாநில வாரியாக போட்டித் தேர்வை நடத்தவேண்டும். மாநிலங்களில் சமநிலை நிலவ மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

மேலும் பேசிய அவர், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் ரயில்வே தேர்வுகளின் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதி வெற்றிபெறுவதாகவும், அதிகாரிகள் அளவில் மட்டுமல்லமால், சாதாரண க்ளெர்க் பதவிகளில் கூட வட மாநிலத்தவர் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெறுவதாகவும் இதனால் தமிழக மக்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த விவாதத்தின் போது பேசிய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ், பிராந்திய மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், தமிழ், கன்னடம் உள்ளிட்ட 13 மொழிகளில் ரயில்வே தேர்வுகள் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.

banner

Related Stories

Related Stories