தமிழ்நாடு

சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன் : சாதுர்யமாக வெளியே எடுத்த மருத்துவர் - புதுக்கோட்டை அருகே பரபரப்பு!

புதுக்கோட்டையில் கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 7ம் வகுப்பு படிக்கும் சிறுவனின் மூக்கில் மீன் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன் : சாதுர்யமாக வெளியே எடுத்த மருத்துவர் - புதுக்கோட்டை அருகே பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அருள்குமார். 7ம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.

சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன் : சாதுர்யமாக வெளியே எடுத்த மருத்துவர் - புதுக்கோட்டை அருகே பரபரப்பு!

அப்போது சிறுவனின் மூக்கில் வலி எடுத்துள்ளது. மூக்கில் ஏதோ சிக்கியிருப்பது போல் உணர்ந்த அருள்குமாரின் பெற்றோர் உடனே அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன் : சாதுர்யமாக வெளியே எடுத்த மருத்துவர் - புதுக்கோட்டை அருகே பரபரப்பு!

அங்கு, சிறுவனை சோதனை செய்ததில், மூக்கில் திலேப்பியா (ஜிலேபி) வகை சிறிய மீன் ஒன்று சிக்கியுள்ளதைக் கண்டறிந்தனர். பின்னர் பணியாளர்களின் உதவியுடன் ஒரு மணிநேரமாகப் போராடி மருத்துவர் கதிர்வேல் மீனை வெளியே எடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories