தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை:முக்கிய குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து- ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு!

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை:முக்கிய குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து- ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அ.தி.மு.க பிரமுகரின் மகன் சம்பந்தப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசுவின் தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

banner

Related Stories

Related Stories