தமிழ்நாடு

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சரிதா வழக்கு : கோவை நீதிமன்றம் தீர்ப்பு விதிப்பு !

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் உட்பட மூன்று பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சரிதா வழக்கு : கோவை நீதிமன்றம் தீர்ப்பு விதிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரிதா நாயர். இவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் இணைந்து கோவை வடவள்ளியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிறுவனத்தின் பெயரில் காற்றலை அமைத்துத் தருவதாக கூறி சுமார் ரூ.26லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணன், மூவரும் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும், நடிகை சரிதா நாயர் முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மேனேஜர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

banner

Related Stories

Related Stories