தமிழ்நாடு

’இனி நீ கடவுளின் குழந்தை’ : சுர்ஜித்துக்காக உருகிய அமைச்சர் விஜயபாஸ்கர்... கொந்தளிக்கும் மக்கள் !

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தின் மறைவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’இனி நீ கடவுளின் குழந்தை’ : சுர்ஜித்துக்காக உருகிய அமைச்சர் விஜயபாஸ்கர்... கொந்தளிக்கும் மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடுக்கட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 80 மணிநேரத்துக்கு முன்பாக சிக்கிக் கொண்டிருந்த 2வயது சிறுவன் சுர்ஜித், உடல் அழுகிய நிலையில் இன்று காலை மீட்கப்பட்டான். பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதும் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழியில் விழுந்த குழந்தையை மீட்க மீட்புப் படையினர் அயராது போராடியும் பலனளிக்காதது அனைவரது மனதிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

’இனி நீ கடவுளின் குழந்தை’ : சுர்ஜித்துக்காக உருகிய அமைச்சர் விஜயபாஸ்கர்... கொந்தளிக்கும் மக்கள் !

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுர்ஜித் விழுந்த அக்.,25ம் தேதியில் இருந்து இறுதி அஞ்சலி செலுத்தப்படும் வரை அனைத்து மீட்பு பணிகளையும் பார்வையிட்டு தகவல் அளித்து வந்தவர் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

அவர் சிறுவன் சுர்ஜித் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “சுர்ஜித்தின் அழுகுரல் இன்னும் தன் காதில் ஒலிக்கிறது என்றும், 85 ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாசப் பிணைப்பில் சிதைத்து இயங்க வைத்தது” என அவரது கவிதை நடையிலான பதிவு நீள்கிறது.

26 அடியில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் இருந்த போதே துரிதமாக செயல்படுவதை விட்டுவிட்டு, 30, 70, 80 அடிகள் என கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையை மீட்பதாகக் கூறி இன்னும் ஆழத்திற்கு அனுப்பிவிட்டு, எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் செயல்பட்டுவிட்டு தற்போது வந்து உருகுவதில் என்ன பயன் என்ற தொணியில் பலர் அமைச்சர் விஜயபாஸ்கரை சாடியுள்ளனர்.

முன்னதாக கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஜோதிமணியும் இது தொடர்பாக நடுக்காட்டுப்பட்டியில் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories