ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மணப்பாறை பாத்திமாபுதூரில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குழந்தையின் உடல் அவனது பெற்றோர் அரோக்கியராஜ் மற்றும் கலாமேரியிடம் ஒப்படைக்கப்பட்டது
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்க புதிதாக அமைக்கப்பட்ட குழிக்குள் பாறையின் தன்மை குறித்து ஆராய தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்றுள்ளனர்
சுர்ஜித்தை மீட்பதற்கான ரிக் இயந்திரம் மூலம் குழித் தோண்டப்பட்டு வந்தாலும், பக்கவாட்டில் துளையிடும் பணி சவாலானதாக இருக்கும் என்பதால் சிறுவனை மீட்கும் பணிக்காக பஞ்சாபில் இருந்து அனுபவம் வாய்ந்த 2 விவசாயிகள் வரவழைக்கப்படுவதாக வருவாய் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜிர்த்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
போர்வெல் பயன்படுத்தி அதிர்வு ஏற்பட்டால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்பதாலேயே இதுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டதால் போர்வெல் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் 1200 குதிரை திறன் கொண்ட போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்தி துவாரன் போட்ட பிறகு மீண்டும் ரிக் இயந்திரத்தின் மூலம் குழியை ஆழப்படுத்த அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்
புதிய பள்ளத்தில் உள்ள கடினமான பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரங்களை பயன்படுத்த மீட்பு படையினர் முடிவெடுத்துள்ளனர்
சிறுவனை மீட்பதற்காக புதிதாக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2வது ரிக் இயந்திரமும் பழுதானது.
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 65 மணிநேரத்தை கடந்து நடைபெற்று வரும் நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் தற்போது மழை பெய்து வருகிறது
ரிக் இயந்திரம் மூலம் இரண்டடி தள்ளி, சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறடு. அதனால் ஏற்படும் அதிர்வில் குழந்தை சுர்ஜித் மேலும் கீழே சென்று விடாமல் இருக்க ஏர் லாக் தொழில்நுட்பம் மூலம் கெட்டியாக பிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை மீட்க உடலளவிலும், மன அளவிலும் திடமாக உள்ள இரண்டு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் சுரங்கம் வழியாக செல்ல தேவையான உடைகள், ஹெட் லைட், ஆக்ஸிஜன் வழங்கும் கருவிகள் என தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த உபகரணங்களோடு தான் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
குழந்தை சுஜித் தற்போது 88 அடியில் சிக்கியிருப்பதாக உறுதிபட கூறப்படுகிறது. எனவே 90 அடி வரை பக்காவாட்டு குழி தோண்டி, அதில் இரண்டு வீரர்களை மீட்க அனுப்ப உள்ளனர்.
சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் ரிக் இயந்திரங்கள் மூலம் இதுவரை 40 அடி ஆழத்துக்கு குழி தோண்டி முடிக்கப்பட்டுள்ளது. தோண்டப்படும் அந்த பகுதியில் பாறைகள் அதிகம் இருப்பதால், நினைத்த நேரத்தை தாண்டியும் தாமதமாகவே பணி நடந்து வருகிறது.
ஆனால், இனி வரும் இடங்களில் பாறைகள் குறைவு என்பதால், பணி விரைந்து முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேற்று காலை 5.30 மணிக்குப் பிறகு, இதுவரை குழந்தையிடம் எந்த வித அசைவும் தென்படவில்லை. ஆனால், நவீன தொழிற்நுட்பங்களை வைத்து ஆய்வு செய்ததில் குழந்தை மயக்க நிலையில் இருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுரங்கம் தோண்டும் பணி காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த நிலையில், கடினமான பாறைகள் இருப்பதால் மீட்புப்பணியில் தாமதம். இன்னும் 6 மணி நேரத்தில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் என்று தகவல்
மற்ற தொழிற்நுட்பங்களின் மூலம் மீட்புப் பணி தோல்வியடைந்த நிலையில், ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க இறுதி முடிவு. இதற்காக மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரமாக கையை பிடிக்க முடியாமல் தொழில் நுட்ப கருவிகள் தடுமாறி வந்தன. இப்போது ரோபோ மூலம் கை பற்றப்பட்டதால் இன்னும் சற்று நேரத்தில் குழந்தை மீட்கப்படும் என்று கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக் கழக குழு அனுப்பிய ரோபோ குழந்தையின் கையை பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி நிபுணர் குழு மீட்பு பணியில் இணைந்துள்ளது. பிரத்யேக ரோபோ மூலம் குழந்தையை மீட்க திட்டம் வைத்துள்ளனர்,
குழந்தை சுஜித் சிக்கியிருக்கும் கிணறுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி, ஆட்கள் குழிக்குள் அனுப்பி மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. வேறு வழிகள் கைகொடுக்கவில்லை என்றால், இந்த வழி தான் இறுதி என்று கூறப்படுகிறது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ரிக் இயந்திரம் மூலம் இந்த சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு 5 மணிநேரமாகும் என்று கூறப்படுகிறது.
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2வயது சிறுவன் சுஜித் விழுந்ததின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள 2 ஆழ்துளை கிணறுகளை 2 நாட்களில் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குறித்த நாட்களுக்குள் மூடாவிடில் உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 23 மணிநேரமாக நீடித்துள்ளது
சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுரங்கம் போன்ற குழித் தோண்ட நெய்வேலியை சேர்ந்த என்.எல்.சி மற்றும் தனியார் அமைப்பு முடிவெடுத்துள்ளது.
கயிறு கட்டி இழுக்கும் முயற்சிகள் கை கொடுக்காத நிலையில், ஹைட்ராலிக் கருவி மூலம் குழந்தையை மேலே எடுக்கும் முயற்சியை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் கையில் கயிறு கட்டி இழுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மணிக் கட்டில் சரியாக கயிற்றை இறுக்க வேண்டும் என்பது சவாலாக உள்ளது. ஏனெனில், தொடர்ந்து மண் சரிவு இருப்பதால், சரியாக கயிறு கட்டப்படாவிட்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மீட்பு பணி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மண் சரிந்து மேலும் 10 ஆழத்துக்கு குழந்தை சுஜித் சிக்கியுள்ளது. 80 அடி ஆழத்தில் இருந்து கயிறு கட்டி இழுக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.
தேசியப் பேரிடர் மீட்புப் பணிக்குழு ஆலோசனை செய்து புதிய திட்டத்தைத் தயார் செய்துள்ளனர். குழந்தையின் மணிக்கட்டில் விசேசக் கயிறைப் பயன்படுத்தி சுருக்குப் போட்டு மேலே இழுக்கத் திட்டமிட்டு, அதற்கான முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
20 மணி நேரமாக மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 33 பேர் உட்பட, 70க்கும் அதிகமானோர் குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறத்தாழ 19 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மீட்பு பணியில் 70க்கும் மேற்பட்ட சிறப்பு மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்
நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து வரும் வேளையில் மாலை நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்சார் கருவிகளை கொண்டு சிறுவன் சுஜித்தின் அசைவை கண்டுபிடிக்கும் முயற்சியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்
நடுக்காட்டுப்பட்டியில் சாரல் மழை பெய்து வருவதால் ஆழ்துளை கிணறு உள்ள பகுதியில் மேற்கூரை அமைத்து சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
கிணற்றில் விழுந்துள்ள குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து வரும் நிலையில் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுவிடும் என மக்கள் பதபதைப்பு.
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள தனது ஆசை மகனை மீட்டெடுப்பதற்காக சுஜித்தின் தாய் கலாமேரி மீட்புப்பை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட்டு மீட்டாக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
சிறுவனை மீட்க நடந்த 3வது முயற்சியும் தோல்வி அடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும் மீட்புப்பணி தொடர்ந்து வருகிறது.
மீட்புப் பணியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, 26 அடியில் இருந்த குழந்தை 68 அடிக்கும் கீழாக அதிகரித்துள்ளது. குழந்தைக்குத் தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த பிரத்யேகக் கருவி வரவழைக்கப்பட்டு, சுருக்குப் போட்டு மேலே எடுக்கும் பணி தொடர்ந்து வருகிறது.
சிறுவன் சுஜித்தை மீட்கும் முயற்சி 6 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. சிறுவன் பத்திரமாக மீட்கப்பட வேண்டி சமூக வலைத்தளங்களில் #savesujith என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
குழந்தை சுஜித் கையில் சுருக்குப் போட்டு மீட்க முயற்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தயார் நிலையில் ஆம்புலன்ஸ், மருத்துவக் குழு உள்ளதாகத் தகவல்.
குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிணற்றின் அகலத்தை அதிகரித்து குழந்தைய மீட்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
குழந்தையை மீட்க சிறப்பு கருவி வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை கண்டுபிடித்த மணிகண்டன் என்பவர், மீட்பு பணியில் ஈடுபட உள்ளார்.
குழந்தையின் அசைவு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
2 மணி நேரத்துக்கும் மேலாக ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சிக்கியுள்ளதால்,
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு மீட்பு படை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.
குழந்தை தவறி விழுந்த ஆழ்துளைக் கிணறு 30 அடி ஆழம் கொண்டது. அதில் 10 அல்லது 12 அடியில் குழந்தை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வீட்டின் அருகே தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் என்ற இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது.
வெகு நேரமாக காணாமல் போன குழந்தையை தேடும் போது, தண்ணீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதன் பின்னர் குழந்தை தவறி விழுந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.