தமிழ்நாடு

வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலித்ததற்காக சொந்த மகளுக்கே போதை ஊசி போட்டு சித்ரவதை: பாஜக தலைவர் மீது புகார்!

தனக்கு போதை மருந்து செலுத்தி, தினமும் சித்ரவதை செய்வதாக, பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ மீது அவரது மகள் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலித்ததற்காக சொந்த மகளுக்கே போதை ஊசி போட்டு சித்ரவதை: பாஜக தலைவர் மீது புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதே பா.ஜ.கவினர் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் உத்தர பிரதேச உனா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அதேபோல், பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாக சட்டக்கல்லூரி மாணவி வீடியோ மூலம் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சுவாமி சின்மயானந்த் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பின்னர் டெல்லியில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இப்படியாக நாளுக்கு நாள் பா.ஜ.க-வினரால் பெண்களுக்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் தனக்கு போதைமருந்து செலுத்தி, தினமும் சித்ரவதை செய்வதாக, பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது அவரது மகள் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரதி சிங் |சுரேந்தர் நாத் சிங்
பாரதி சிங் |சுரேந்தர் நாத் சிங்

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர்நாத் சிங். பா.ஜ.க தலைவரான இவர் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார். இவர் மகள் பாரதி சிங். இவர் தனது மகளைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

முன்னதாக பாரதி சிங் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்துக் கொள்ள பா.ஜ.க தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு, மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்திலும் பாரதி சிங் முறையிட்டுள்ளார். பின்னர் இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் பாரதி சிங் வெளியிட்டுள்ளார்.

அதில் “தான் காணாமல் போகவில்லை; சித்ரவதை தாளாமல் ஒளிந்து வாழ்கிறேன்” என்று வீடியோவில் தோன்றி பாரதி சிங் பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், “நான் என் விருப்பப்படி வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.

வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலித்ததற்காக சொந்த மகளுக்கே போதை ஊசி போட்டு சித்ரவதை: பாஜக தலைவர் மீது புகார்!

ஒரு எம்.எல்.ஏ-வின் மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என என் வீட்டில் கட்டாயப்படுத்துகிறார்கள். அதை இறுதி வரையில் நான் ஏற்றுக்கொள்ளாததால் ஊசி மூலம் எனக்கு போதை மருந்தை ஏற்றுகிறார்கள்” என குற்றம்சாட்டினார்.

மேலும், “தினமும் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். நான் மனநலம் பாதிக்கப்பட்டவள் எனப் போலியாக மருத்துவச் சான்றிதழ் வாங்கி, வேண்டுமென்றே என்னைத் துன்புறுத்துகிறார்கள். தற்போது நான் சந்தோசமாக உள்ளேன். தயவு செய்து என்னைத் தொல்லை செய்யாதீர்கள்” என வேதனையுடன் பேசியுள்ளார்.

அத்துடன், பாரதி சிங் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதற்கு ஆதாரமாக பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது கூட அவர் 3 பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றிருப்ப தற்கான ஆதாரத்தை பாரதி சிங்-கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories