தமிழ்நாடு

டெங்கு கொசுக்களை வளர்த்த Zomatoக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் உள்ள ஸொமேட்டோ நிறுவனத்துக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.

டெங்கு கொசுக்களை வளர்த்த Zomatoக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் டெங்குக் கொசுக்களை அழிக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் படி அறிவுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு சுத்தமாக வைத்திருக்காத வீடு, வர்த்தக நிறுவனங்கள் என அனைத்திலும் ஆய்வு செய்து தகுந்த அபராதமும் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸோமேட்டோ நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிறுவனத்தின் மாடியில் உணவு டெலிவரி செய்வதற்கான பைகளில் மழைநீர் தேங்கி உள்ளதை கண்டறிந்தனர்.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு ஏதுவாக உள்ளதால் ஸோமேட்டோ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும், கடந்த 8 நாட்களில் மட்டும் சென்னையில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 387 பேரிடம் 20 லட்சம் ரூபாய் அபரசாதமாக வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories