தமிழ்நாடு

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்ட திபெத்திய பேராசிரியர் கைது!

சீன அதிபர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திபெத்திய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்ட திபெத்திய பேராசிரியர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அக்டோபர் 11 முதல் 13ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இருநாடு உறவு குறித்து பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதனையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றிப்பார்க்க உள்ளனர். இதற்காக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. இந்நிலையில், சென்னைக்கு வரவிருக்கும் ஜி ஜின்பிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்ட திபெத்திய பேராசிரியர் கைது!

இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் சந்தேகத்திற்கிடமாக 21 திபெத்தியர்கள் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சேலையூர் காவல்துறையினர் 8 திபெத்திய மாணவர்களை கைது செய்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் டென்சின் நூர்பு என்பவரை நீலாங்கரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்ட திபெத்திய பேராசிரியர் கைது!

டென்சிங் நூர்பு கடந்த சில ஆண்டுகளாகவே திபெத் தொடர்பான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போராட்டம் தொடர்பாக வேறு யாரேனும் திட்டமிட்டு இருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories