தமிழ்நாடு

கோமாளி மாஸ்க், சிக்னல் கொடுக்க காலில் கயிறு - லலிதா ஜுவல்லரி கொள்ளையின் புதிய சிசிடிவி வீடியோ!

திருச்சி லலிதா நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பரபரப்பு மிகுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோமாளி மாஸ்க், சிக்னல் கொடுக்க காலில் கயிறு - லலிதா ஜுவல்லரி கொள்ளையின் புதிய சிசிடிவி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரியின் தரைத் தளத்தில் இருந்த நகைகள் கூண்டோடு கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

கமர்சியல் சினிமா படங்களில் வருவது போல, ஜோக்கர் மாஸ்க், மிளகாய் பொடி, துளையிட்டு உள் நுழைதல் பல தில்லாங்கடி வேலைகளில் ஈடுபட்டு லலிதா ஜுவல்லரியில் உள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக 7 காவல்துறை அதிகாரிகள் குழு கொண்ட தனிப்படை விசாரித்து வருகிறது.

இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதிபட தெரிவித்த திருச்சி மாநகர கமிஷ்னர் அமல்ராஜ், புதுக்கோட்டையில் சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருந்த ஜார்கண்டைச் சேர்ந்த வட மாநிலத்தவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கோமாளி மாஸ்க், சிக்னல் கொடுக்க காலில் கயிறு - லலிதா ஜுவல்லரி கொள்ளையின் புதிய சிசிடிவி வீடியோ!

மேலும், கொள்ளையடித்த நகைகளுடன் கரூர் சாலை வழியாக கொள்ளையர்கள் சென்றுள்ளது மோப்ப நாயின் உதவியின் மூலம் தெரியவந்ததால் வழி நெடுகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு தீவிரமாக கொள்ளையர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், லலிதா ஜுவல்லரியில் கொள்ளையர்கள் நகைகளை ஒவ்வொரு ரேக்கில் இருந்தும் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில்ம் இருவர் கையில் கையுறை, முகத்தில் கோமாளி மாஸ்க் அணிந்துக் கொண்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அதில் ஒருவர் தன்னுடைய காலில் ஒரு கயிறு ஒன்றை கட்டிக்கொண்டு உள்ளேயும் வெளியேயும் சென்று பார்த்து உஷாராக இருந்து நகைகளை கொள்ளயடிக்கிறான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறு துப்பு கிடைத்தாலும் போதும் என்ற வகையில் போலிஸார் இந்த விவகாரத்தில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொள்ளை நடந்த சமயத்தில் லலித ஜுவல்லரியை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்ணின் சிக்னலையும் சைபர் க்ரைம் உதவியுடன் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories