திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் சோலையம்மாள் தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். குமார் சோலையம்மாள் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் சோலையம்மாளுக்கு கடந்த 14ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் 5வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்னளது. அந்தப் பெண் குழந்தையுடன் 16ம் தேதி அரசு மருத்துவமனை இருந்து திடிரென தலைமறைவு ஆகிவிட்டார் சோலையம்மாள்.
இதனால் அரசு மருத்துவமனை மருத்துவர் ஆனந்தன் ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சோலையம்மாளுக்கும் அவரது கணவனின் அண்ணன் பாபுவுக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது.
பாபுவுக்கும் - சோலையம்மாளுக்கும் பிறந்த குழந்தை என்பதால் இருவரும் பச்சிளங் குழந்தையை கொன்று சேவூர் கிராமத்தை சேர்ந்த சுபன்சன் ஜெயின் என்பவருக்கு செந்தமான விவசாய நிலத்தில் புதைத்ததுள்ளனர்.
இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி ஆரணி காவல்துறையினர் பாபு மற்றும் சோலையம்மாளை கைது செய்தனர். குற்றவாளிகளான சோலையம்மாள், பாபு ஆகியோரை குழந்தையைக் கொன்று புதைத்த இடத்தை நேரில் அடையாளம் காண்பித்தனர். பின்னர், குழந்தை உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.