தமிழ்நாடு

“சுபஸ்ரீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால்...” - பெற்றோரை கலங்கச் செய்த கூரியர் தபால்!

அ.தி.மு.க பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

“சுபஸ்ரீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால்...” - பெற்றோரை கலங்கச் செய்த கூரியர் தபால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் அ.தி.மு.க பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ, கனடா செல்வதற்கான தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சுபஸ்ரீ, பள்ளிக்கரணை பகுதியில் அ.தி.மு.க-வினரால் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.

பி.டெக் பொறியியல் படிப்பு முடித்திருந்த சுபஸ்ரீ அதில் முதுகலை படிப்பை கனடாவில் படிக்க முடிவு செய்து கடந்த 7 மற்றும் 10ம் தேதி சென்னை பிரிட்டிஷ் காலேஜில் ஐஐஇடி தகுதி தேர்வு எழுதியிருந்தார். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே கனடா படிப்பிற்கு தேர்வாக முடியும் என்பதால் தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் தான் அவரது இழப்பு பேரிடியாக அமைந்தது.

இந்நிலையில், நேற்று சுபஸ்ரீ வீட்டிற்கு வந்த கூரியர் தபால் மூலம், சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது. தகுதித் தேர்வில் 9 மதிப்பெண்களுக்கு 7 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேரச்சி பெற்றுள்ளார் சுபஸ்ரீ.

“சுபஸ்ரீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால்...” - பெற்றோரை கலங்கச் செய்த கூரியர் தபால்!

இதுகுறித்து சுபஸ்ரீயின் பெற்றோர், “இதைப் பார்க்க எங்கள் மகள் உயிருடன் இல்லையே... முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் ஸ்காலர்ஷிப்புடன் கூடிய மேற்படிப்பு படித்திருப்பாள்” எனக் கூறி கண்கலங்கினர்.

இந்த நிகழ்வு சுபஸ்ரீ பெற்றோர் மட்டுமல்லாமல், பொதுமக்கள் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories