தமிழ்நாடு

“ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையை ஏற்பார்கள்” சிறையிலிருந்து ப.சிதம்பரம் ட்விட்!

தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் ஏற்பார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

“ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையை ஏற்பார்கள்” சிறையிலிருந்து ப.சிதம்பரம் ட்விட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்கு பதிலாக, பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.

அதாவது, முதலில் குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலை தேர்வில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 150 மதிப்பெண்களும், பொது அறிவியலில் 100 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 150 மதிப்பெண் என மொத்தம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் என வழங்கப்படும்.

ஆனால் தற்போது, மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 கேள்விகளும், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் என்று புதிய பாடத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி-யின் இந்த புதிய அறிவிப்பால் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு இனி பணி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் மாநில அரசு நடத்தும் தேர்விலே தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி-யின் இந்த புதிய அறிவிப்புக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் சார்பில் அவரது குடும்பத்தினர் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், “தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories