தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டம் எதிரொலி:  நீட்டில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு!

நீட் தேர்வு அமல்படுத்தியது முதல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவெடுத்துள்ளது

நீட் ஆள்மாறாட்டம் எதிரொலி:  நீட்டில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று, தேனியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவரும் அவரது தந்தை அரசு மருத்துவர் வெங்கடேஷனும் சிபிசிஐடி போலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது

இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இடைத்தரகர்களிடமும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் ஆள்மாறாட்டம் எதிரொலி:  நீட்டில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு!

இந்த நிலையில் நீட் தேர்வை முதல் முதலில் அமல்படுத்திய 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளின் ஆவணங்களையும் ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியலை தருமாறு அந்தந்த மையங்களுக்கு சிபிசிஐடி போலிஸார் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories