தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணம் : தலைமறைவாக இருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் கைது!

சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுபஸ்ரீ மரணம் : தலைமறைவாக இருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த செப்டம்பர் 12ம் தேதி சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகனின் திருமணத்திற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் ஐ.டி ஊழியர் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தண்ணீர் லாரி ஓட்டுனர் மனோஜ் என்பவரை பரங்கிமலை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். மேலும், பேனரை அச்சடித்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. ஆனால், சுபஸ்ரீயின் இறப்புக்கு காரணமான சட்ட விரோத பேனர் வைத்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

சுபஸ்ரீ மரணம் : தலைமறைவாக இருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் கைது!

பின்னர், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தொடர் அழுத்தத்தால் பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது காவல்துறையினர் செப்டம்பர் 14ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்யாதது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories