தமிழ்நாடு

சிறுமியை கடத்த முயன்ற இந்து முன்னணி பிரமுகர் : பொதுமக்களே பிடித்து போலிஸில் ஒப்படைப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தந்தையை தாக்கிவிட்டு 17 வயது சிறுமியை கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமியை கடத்த முயன்ற இந்து முன்னணி பிரமுகர் : பொதுமக்களே பிடித்து போலிஸில் ஒப்படைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியும், தனியார் ஆலையில் வேலைப் பார்த்து வரும் அவரது 17 வயது மகளும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை வேலை முடிந்த மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது அந்தவழியாக வாகனத்தில் வேகமாக வந்த கும்பல் இவர்களை வழிமறித்துள்ளனர். பின்னர் தடுக்கச் சென்ற தந்தையை தாக்கிவிட்டு அந்த சிறுமியையும், தந்தையும் வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார்கள்.

கடத்திச் செல்வதாக வாகனத்தில் சென்ற தந்தையும் மகளும் கூச்சலிட்டுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் வாகனத்தை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் வாகனம் மிக வேகமாக திருச்சியை நோக்கிச் சென்றது.

உடனே அப்பகுதி மக்கள் பொன்னம்பாலப்பட்டி மக்களுக்கு தகவல் கொடுத்ததும், கடத்தல் வாகனத்தை மறிக்க அப்பகுதி மக்கள் சுங்கச்சாடி அருகே காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இதனை சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பல் வாகனத்தை திண்டுக்கல் நோக்கி திருப்பியுள்ளது.

சிறுமியை கடத்த முயன்ற இந்து முன்னணி பிரமுகர் : பொதுமக்களே பிடித்து போலிஸில் ஒப்படைப்பு!

இடையில் உள்ள கிராம மக்களுக்கு அடுத்ததடுத்து தகவல் செல்ல அந்த வாகனத்தை மறிக்க பொதுமக்கள் காத்துக்கிடந்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த கடத்தல் கும்பல் பக்கிரிக்காடு பகுதியில் சிக்கிக்கொண்டது.

அந்த வாகனத்தை வழிமறைப்பதற்கு பொதுமக்கள் சாலையில் கற்கள், கட்டைகளை போட்டு சாலையை மறைத்து நின்றுக்கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடத்தல் கும்பல் வாகனத்தை திருப்பும் போது தலைகீழாக கழ்ந்தது.

பின்னர் காரில் இருந்த சிறுமியையும், அவரது தந்தையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் வாகனத்தில் இருந்த நான்கு பேரையும் பிடித்து தர்ம அடிக்கொடுத்தனர். இதனையடுத்து போலிஸாருக்கு தகவல் கொடுத்து அவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காரில் இருந்து இரண்டு பேர் தப்பி ஒடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை கடத்த முயன்ற இந்து முன்னணி பிரமுகர் : பொதுமக்களே பிடித்து போலிஸில் ஒப்படைப்பு!

பின்னர் போலிஸார் மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தைக்கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியான குழந்தைவேல் இந்து முன்னணி அமைப்பின் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. மேலும், குழந்தைவேலு, சிறுமியை காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து வைக்க கோரியும் சிறுமியின் தந்தைக்கு தொல்லைகொடுத்துள்ளார்.

பெண்ணின் தந்தை திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலிஸார் தரப்பு விசாரணையில் கூறியதாக தகவல் வெளியாகின. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து தப்பித்து ஓடிய, குழந்தைவேலு மற்றும் செல்லபாண்டியை தீவிரமாக தேடி வருவதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories