சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. முன்னதாக விஜயலட்சுமி, அவரின் கணவர் சங்கருடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு கணவர் சங்கர் இறந்துவிட அங்கு இருந்த விட்டை விட்டு சென்னையில் குடியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள வீட்டை விற்கவும் விஜயலட்சுமி முடிவு எடுத்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பெங்களூரைச் சேர்ந்த நிலபுரோக்கர் பாஸ்கர் என்பவரைத் தொடர்ப்புக்கொண்டார். அவர் விற்றுதருவதாக வாக்குறுதி அளித்தநிலையில் அடிக்கடி வீடு விற்ப்பதற்காக பெங்களூர் சென்று வருவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 4-ம் தேதி வெளியே சென்ற விஜயலட்சுமி ஒருநாள் முழுவதும் வீடுதிரும்பவில்லை விஜயலட்சுமி. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்டப் போலிஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது விஜயலட்சுமி செல்போன் வைத்து விசாரித்தபோது சென்னை மயிலாப்பூருக்கு சென்றதும், அங்கு வழக்கறிஞரை சந்திததும் தெரியவந்துள்ளது. ஆனாலும் வழக்கறிஞரிடம் போதிய தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் போலிஸார் மயிலாப்பூர் வழக்கறிஞர் வீடு மற்றும் விஜயலட்சுமி வீடுகளில் இருந்த சி.சி.டி.வு காட்சிகளை ஆய்வு செய்ததில், தன் வீட்டில் இருந்து ஒரு காரில் விஜயலட்சுமி செல்வதைக் கண்டுபிடித்தனர்.
காரின் நம்பர் வைத்து விசாரித்தபோது பெங்களூருரைச் சேர்ந்த நிலபுரோக்கர் என்பதும் அவருடன் தான் காரில் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் பாஸ்கரை நேரில் சென்று கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.
முதலில் விசாரணை எந்த தகவலும் தெரியாது என தெரிவித்த பாஸ்கர், சி.சி.டி.வு காட்சிகளைப் பார்த்ததும் மகாலட்சுமியின் வீட்டிற்காக அவரை எரித்துக்கொன்றதாக ஓப்புகொண்டுள்ளார். இந்த வாக்குமூலத்தைக் கேட்டப் போலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வாக்குமூலத்தில், ” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் மகாலட்சுமியை தெரியும், அவர் கணவர் இறந்தது மற்றும் குடும்பம் குறித்தத் தகவல் தெரியும். அந்த வீட்டை விற்றுதருவதாக முதலில் ஒப்புக்கொண்டு பின்னர் அந்த வீட்டை நானே அபகரிக்க முயற்சி எடுத்தேன் எனக் கூறியுள்ளார். மேலும், அந்த வீட்டின் பேரில் பலரிடம் விஜயலட்சுமி கையெழுத்தைப் நானேப்போட்டு பணம் வாங்கி செலவு செய்துவந்தேன்.
இந்நிலையில் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் தொந்தரவு செய்யவதால் விஜயலட்சுமியைக் கொலை செய்தால் தான் வீட்டை விற்க்கமுடியும் என நினைத்து இதைச் செய்தேன். இந்த சம்பவத்திற்கு எனக்கு என்னுடைய நண்பர் சதீஷ் உதவி செய்தார்.” என்றார்.
திட்டப்படி பாஸ்கரும் சதீஷும் சென்னை வந்து விஜயலட்சுமியிடம், வீட்டை வாங்கிக் கொள்ள ஒரு ஆள் உள்ளார் விற்க போகலாம் எனக் கூறி காரில் பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போகும் வழியில் குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து அவருக்குக் கொடுத்துள்ளனர். மயக்கம் தெளியாததால், இறந்துவிட்டார் என நினைத்து, ஆளில்லா பகுதிக்கு அவரின் உடலை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றிக் எரித்துக் கொன்றுள்ளனர்.
பின்னர் போலிஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து உடல் எரிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். பின்னர் எரிக்கப்பட்ட இடத்திற்கு வந்த விஜயலட்சுமி குடும்பத்தினர் கதறி அழுதனர். அங்கு இருந்த சாம்பலை சொந்த ஊரான கும்பகோணத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.
விஜயலட்சுமி கொலையில் கைதான பாஸ்கர், சதீஷ் ஆகிய இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.