தமிழ்நாடு

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பல லட்சம் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்” : வணிகர் சங்கத்தினர் கவலை!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 12 மாவட்டங்களிலுள்ள சுமார் 9,000 கடைகள் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் விக்கிரமராஜா.

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பல லட்சம் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்” : வணிகர் சங்கத்தினர் கவலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினால் 12 மாவட்டங்களிலுள்ள சுமார் 9,000 கடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.

இது தொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மனு அளித்துள்ளனர்.

பின்னர், இதுகுறித்துப் பேசிய ஏ.எம்.விக்கிரமராஜா, “வணிகர் வாரியம் முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. நல அமைப்பை சீரமைக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் தடை சட்டத்தில் உள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், பேனர்களை தடை செய்தால் பல லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு உரிய தீர்வு காண வலியுறுத்தியிருக்கிறோம். சிரமத்தைக் குறைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும்.

முழுமையாக பேனர்களை தடை செய்தால் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories