தமிழ்நாடு

உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி : சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது நடவடிக்கையைக் கண்டித்து கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகி மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி : சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட தற்போது திகார் சிறையில் உள்ளார். அவரி கைது நடவடிக்கை பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் பலிவாங்கள் என நாடுமுழுவது காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் முடியும் தருவாயில் உள்ள போது கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி முருகன் மத்திய பாஜக அரசைக் கண்டித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கிழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டத்தாக கூறியுள்ளனர்.

இதயநோயாளியான முருகன் உண்ணாவிரம் இருந்ததால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே காங்கிரசின் முக்கிய நிர்வாகி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories