தமிழ்நாடு

“ஹெல்மெட் கொடுத்தால் நீங்களும் ‘காப்பான்’ ஆகலாம்” : போலிஸின் ஐடியாவுக்கு தலையசைத்த சூர்யா ரசிகர்கள்!

புதுப்படம் ரிலீஸாகும் போது பேனர் வைப்பதற்கு பதில் ஹெல்மெட் கொடுக்கலாம் என போலிஸ் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

“ஹெல்மெட் கொடுத்தால் நீங்களும் ‘காப்பான்’ ஆகலாம்” : போலிஸின் ஐடியாவுக்கு தலையசைத்த சூர்யா ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க-வினர் வைத்த பேனர் விழுந்ததால் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது.

இதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வன்மையான கண்டனங்களை தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், இனி எந்த நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என எவற்றுக்கும் பேனர், கட் அவுட், ப்ளக்ஸ் போன்றவற்றை வைக்கக் கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை பாயும் எனவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

“ஹெல்மெட் கொடுத்தால் நீங்களும் ‘காப்பான்’ ஆகலாம்” : போலிஸின் ஐடியாவுக்கு தலையசைத்த சூர்யா ரசிகர்கள்!

அதன்பிறகு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலர் பேனர் கலச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தங்களது தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தனர்.

அதுபோல, வருகிற 22ம் தேதி பிகில் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு எந்த பேனரும் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் கேட்டுக் கொண்டார். நடிகர் அஜித்தின் ரசிகர்களும், இனி எந்த படத்துக்கும் பேனர் வைக்க மாட்டோம் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று சென்னையில் காப்பான் பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, தனது பட ரிலீஸின் போது பேனர் எதுவும் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் , புதிய படங்கள் ரிலீசாகும் போது, ப்ளக்ஸ், பேனர், கட் அவுட் வைப்பதற்கு பதில் மக்களுக்கு தரமான ஹெல்மெட் வழங்கினால் அவர்களும் காப்பானாக முடியும் என பதிவிட்டிருந்தார்.

துணை ஆணையர் அர்ஜுனின் இந்த பதிவு வைரலானதை அடுத்து, காப்பான் படம் ரிலீசாகும் போது ரசிகர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்படும் என சூர்யாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories