தமிழ்நாடு

நண்பரைக் கொல்ல முயற்சி... காப்பாற்ற வந்த சக நண்பரை விரட்டி விரட்டிக் கொலை - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

மதுரையில் நண்பரைக் காப்பாற்றச் சென்றவரை ஓட ஓட விரட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பரைக் கொல்ல முயற்சி... காப்பாற்ற வந்த சக நண்பரை விரட்டி விரட்டிக் கொலை - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாவட்டம் சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் அவரது உறவினர் செல்வ கார்த்திக்கும் இடையே முன்பு பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த பிரச்னை சில நாட்களில் சுமுகமாகிவிட்ட நிலையில் நேற்றைய தினம் செல்வ கார்த்தி வீட்டிற்குச் சென்று கார்த்திகேயன் பேசியுள்ளார். அப்போது மீண்டும் முன்பு ஏற்பட்ட பிரச்னை குறித்துப் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தின் உச்சிக்குச் சென்ற செல்வ கார்த்தி அமர்ந்திருந்த இடத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகேயனை குத்திக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது கார்த்திகேயனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்று கொண்டிருந்த கார்த்திகேயனின் நண்பர் கருப்பையா செல்வ கார்த்திக்கை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வ கார்த்தி, கருப்பையாவைத் தாக்க முயன்றுள்ளார்.

நண்பரைக் கொல்ல முயற்சி... காப்பாற்ற வந்த சக நண்பரை விரட்டி விரட்டிக் கொலை - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

அப்போது தப்பித்து ஓடிய கருப்பையாவை விட்டால் பிரச்னையாகிவிடும் என எண்ணி துரத்திச் சென்று ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் செல்வ கார்த்தி. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கு மக்கள் கூடியதால் செல்வ கார்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு காயமடைந்த கார்த்திகேயனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கருப்பையா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய செல்வ கார்த்தியை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories