தமிழ்நாடு

ஏழு பேர் விடுதலை - ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் !

ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பிய தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீநிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு பேர் விடுதலை - ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுவிக்கக் கோரி, கடந்த பிப்ரவரியில் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என தெரிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories