தமிழ்நாடு

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு : தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்!

சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் 14வது நாளாக ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு : தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் உருக்காலை என்பது சேலத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பெருமை சேர்த்தது. இந்த ஆலையை தமிழகத்தில் அமைக்க கடந்த 1975ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரகாந்தி ஒப்புக்கொண்டார். பல தலைவர்கள் போராடி பெற்றதுதான் சேலம் இரும்பு உருக்கு ஆலை.

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் 4 ஆயிரம் ஏக்கர் பரபப்பளவில் அமைந்துள்ள சேலம் உருக்காலை, இரும்பு மற்றும் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் உள்பட உலகத் தரத்திலான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலையாக செயல்பட்டு வருகிறது.

இவ்வளவு சிறப்புகள் உள்ள இந்த சேலம் உருக்காலையை மத்திய பா.ஜ.க அரசின் சரியான ஒத்துழைப்பின்மையால் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி, கடந்த 5 ஆண்டுகளாக சேலம் இரும்பாலை உள்பட சில ஆலைகளை தனியாருக்கு கொடுத்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு ஆலையிலும் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு : தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்!

இந்நிலையில் ஜூலை முதல் வாரத்தில் செயில் நிறுவனம், தனது கட்டுப்பாட்டில் உள்ள சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க உலகளாவிய டெண்டர் கோரி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, சேலம் உருக்காலை தனியார்மயம் செய்யப்படுவதை கண்டித்து தொழிலாளர்கள் அனைவரும் ஜூலை 5ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேலம் உருக்காலை தனியார் மயத்திற்கு எதிராக கண்டன அறிக்கைகளை என வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்ய டெண்டர் வெளியிட்டதை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் 14வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்களும் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories