தமிழ்நாடு

“போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குபோட்டு விவசாயி தற்கொலை”

போலீஸ் விசாரணைக்கு பயந்து விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

“போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குபோட்டு விவசாயி தற்கொலை”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பஜனை தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 38) . விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பூங்கொடி தனது குழந்தைகளுடன் காணிமேட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜன் தனது மனைவி வேலைபார்க்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று பூங்கொடியிடம் தகராறு செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடி கோட்டக்குப்பம் அனைத்து மகளிர்போலீசில் புகார்செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு வரும்படி நடராஜனிடம் கூறப்பட்டது.

விசாரணைக்கு சென்றால் போலீசார் தன்னை தாக்கிவிடுவார்கள் என்று பயந்து நேற்று இரவு நடராஜன் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பலாமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும், மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய நடராஜன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories