“திராவிடர் கழகம் அவர் கைகளில் ஒரு தீப்பிடித்த பேனாவைத் திணிக்கிறது; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏறுமுகம் அந்தத் தீயின் மீது நெய்மழை பெய்கிறது; எரிகிறது; பற்றி எரிகிறது; மடமை எரிகிறது; மூடநம்பிக்கை எரிகிறது; வர்ணாசிரமம் எரிகிறது..!
சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; வற்றிக் கிடந்த வாழைத் தண்டு வனங்களிலும் லட்சியம் எரிகிறது; எரியாதவை - எழுதிய காகிதமும் திரையிடப்பட்ட திரையும்தான்...”
- கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில், ‘கலைஞரின் திரைத்தமிழ்’