வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
5 August 2019, 11:26 AM
வானியம்பாடி பெரியப்பேட்டை உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே பணப்பட்டுவாடா செய்த 2 பேரை மக்களின் உதவியுடன் தி.மு.கவினர் சிறை பிடித்ததாகவும், அவர்கள் 2 பேரையும் அமைச்சர் நிலோபர் கபிலின் உதவியாளர் காரில் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. பிடிபட்ட 2 பேரும் அ.தி.மு.கவினர் என தகவல் வெளிவந்துள்ளது.
5 August 2019, 10:07 AM
வேலூர் மக்களவை தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
குடியாத்தம் 44.38 சதவீதம், அணைக்கட்டு 62.76% சதவீதம், வாணியம்பாடி 46.71 சதவீதம், ஆம்பூர் 50.86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் வேலூர் 54.93 சதவீதம், கே.வி குப்பம் 55.52 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.
வேலூர் மக்களவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 29.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அணைக்கட்டு 27.14 சதவீதம், வாணியம்பாடி 30.21 சதவீதம், ஆம்பூர் 31.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் வேலூர் 24.73 சதவீதம், கே.வி குப்பம் 30.75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்
6 சட்டமன்ற தொகுதிகளில் வேலூர் - 8.79சதவீதம், அணைக்கட்டு - 6.10 சதவீதம், கே.வி.குப்பம் - 8.85 சதவீதம், குடியாத்தம் - 6.79 சதவீதம், வாணியம்பாடி - 6.29 சதவீதம், ஆம்பூர் - 7.76 சதவீதம் என மொத்தம் 7.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்.
5 August 2019, 04:21 AM
வேலூர் மக்களவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 7.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வேலூர் மக்களவை தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர். முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அவர்களுக்கு மலர் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளது.
5 August 2019, 03:14 AM
வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது அதற்கு பதில் தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை நிர்ணயித்துள்ளது. அதில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு.
5 August 2019, 03:09 AM
வேலூர் மக்களவை தேர்தலில் அல்லாபுரம் வாக்குச்சாவடியில் ஆட்சியர் சண்முக சுந்தரம் தனது வாக்கை பதிவு செய்தார்.
5 August 2019, 02:44 AM
வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.