தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் வேலைக்கு 564 காலிப்பணியிடங்களை அறிவித்திருக்கிறது வன சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம்.
இதில் பொதுப்பிரிவினருக்கு 144 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 123 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 93 இடங்களும், ஆதி திராவிடர் பழங்குடியினர் பிரிவினருக்கு 188 காலியாக உள்ளன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ரூ.16,600 முதல் ரூ.52,400 வரைக்கும் ஊதிய விகிதம் வழங்கப்படும். 1.7.2019ம் தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 வருடங்கள் வயது தளர்வு அளிக்கப்படும்.
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு, உடற் தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வுமற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
உடற் தகுதி தேர்வில், ஆண்கள் 163 செ.மீ உயரம் இருக்க வேண்டும். பழங்குடியின ஆண்கள் 152 செ.மீ உயரம் இருந்தால் போதும். அதேபோல் பெண்கள் மற்றும் திருநங்கைகள் 150 செ.மீ உயரம் இருக்க வேண்டும். பழங்குடியின பெண்கள் 145 செ.மீ உயரம் இருந்தால் போதும்.
www.forests.tn.gov.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 10. ஆன்லைன் எழுத்து தேர்வு அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறும்.