தமிழ்நாடு

“நீட் தேர்வில் பாஸாகியிருந்தால் இப்போது படிக்கப் போயிருப்பேன்” தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!

நெல்லையை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

“நீட் தேர்வில் பாஸாகியிருந்தால் இப்போது படிக்கப் போயிருப்பேன்” தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான  கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது மத்திய அரசு. இதனை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டிய மாநில அரசோ மவுனம் சாதித்து வருகிறது, அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாக்கள், நிராகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே தமிழகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனை மறைத்து பா.ஜ.க.,விற்கு தனது விசுவாத்தைக் காட்டிவிட்டு தமிழக மாணவர்கள் நலன்களை பறித்துள்ளது.

மாநிலம் முழுவதும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ள கற்றுக் கொடுப்பதாக அ.தி.மு.க அரசு தம்பட்டம் அடித்தது. ஆனால் அ.தி.மு.க அரசு சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற 19,000 மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

“நீட் தேர்வில் பாஸாகியிருந்தால் இப்போது படிக்கப் போயிருப்பேன்” தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான  கடிதம்!

இந்நிலையில் நெல்லையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகள் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலைக்கும் எழுதிய கடிதம் காண்போரை சோகத்தில் மூழ்கடிக்கிறது.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வராஜ் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மகள் தனலட்சுமி பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 முடித்துள்ளார். மருத்துவம் படித்து டாக்டராக வேண்டும் என்று லட்சியத்துடன் சிறுவயதில் இருந்து படித்து வந்துள்ளார். அவர் அவர் பத்தாம் வகுப்புத் தேர்வில் 460 மதிப்பெண் பெற்றிருந்தார் தனலட்சுமி.

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதால், நீட் தேர்வுக்காக பயிற்சி மையம் செல்ல வேண்டும் எனப் பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் குடும்ப கஷ்டம் காரணமாக அவரை பயிற்சி வகுப்பில் சேர்க்கவில்லை. அதனால் வீட்டில் இருந்து படித்து தேர்வு எழுதிய அவரால் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் மருத்துவ படிப்பு தகர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மாணவி எழுதிய கடிதம்
மாணவி எழுதிய கடிதம்

இரண்டு மாதமாக வீட்டில் இருந்து சோகத்தில் மூழ்கியுள்ளார். நேற்று முன் தினம் விரக்த்தியில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டனர். அப்போது மாணவியின் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அந்த கடித்தில் தனலட்சுமி தெரிவித்திருப்பதாவது,“என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னால் நான் ஆசைப்பட்டதைப் படிக்க முடியவில்லை. நான் நீட் தேர்வில் பாஸாகியிருந்தால் இப்போது படிக்கப் போயிருப்பேன். பணம் தான் என் கனவுகளை நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது.

நான் மட்டும் நீட் கோச்சிங் கிளாசுக்குப் போயிருந்தால், இப்போது டாக்டருக்குப் படிச்சுக்கிட்டு இருந்திருப்பேன். நான் ஆசைப்பட்டதை அடையுற ராசி இல்லாதவளாப் போயிட்டேன். வீட்டிலும் வெளியிலும் நான் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கலை. நான் பிறந்ததே வேஸ்ட். அதனால் போயிட்டு வர்றேன்

தங்கை வர்ஷினியை நல்லாப் படிக்க வையுங்க. உங்க பணக் கஷ்டத்தை நான் குறைச்சிருக்கிறேன். கலையரசி, சுதாகரை நல்லாப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வாழ்க்கையே வெறுத்துப் போய்த்தான் சாகிறேன். நான் ஒரு மாதமாக உள்ளுக்குள்ளேயே வச்சுக் கவலைப்பட்டேன். இப்போது என்னால் முடியவில்லை. சாரி அம்மா. ஐ லவ் யூ அம்மா.. உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். தயவு செய்து நீட் தேர்வை தடை செய்யுங்கள்’’”. என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories