தமிழ்நாடு

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு - இதில் தமிழகத்திற்கு கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா?

கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு   புவிசார் குறியீடு - இதில் தமிழகத்திற்கு கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் விளைவிக்க அல்லது தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு அதன் தரத்தைப் பாதுகாக்கும் விதமாக வழங்கப்படும் சான்று. இந்த புவிசார் குறியீடு பெரும் பொருள், ஒரு மாநிலத்தின் தனித்துவம் பெற்ற சிறப்புமிக்கதாக இருக்கும்.

இதே போன்ற தனித்துவம் பெற்றக் காரணிகளின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ குணம் கொண்ட கொடைக்கானல் பூண்டிற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தால், அதிக புவிசார் குறியீடுகள் பெற்ற எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்திருப்பது கூடுதல் சிறப்பு. கர்நாடகா முதல் இடத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

முன்னதாக 2018ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கொடைக்கானல் மலைப் பூண்டிற்குக் குறியீடு வழங்கக் கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பிம் செய்யப்பட்டது

இதனையடுத்து இந்த விண்ணப்பத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மத்திய அரசு தற்போது மலைப்பூண்டின் மகத்துவத்திற்கு சான்று வழங்கும் வகையில் புவிசார் குறியீட்டே வழங்கியுள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories