தமிழ்நாடு

மொய் விருந்தில் வசூலான நான்கு கோடி : திருட வந்து மாட்டிக்கொண்ட திருடர்கள்.. தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள் !

புதுக்கோட்டை மொய் விருந்தில் வசூலான நான்கு கோடி ரூபாயை திருட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொய் விருந்தில் வசூலான நான்கு கோடி : திருட வந்து மாட்டிக்கொண்ட திருடர்கள்.. தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி பகுதிகளில் உள்ள மக்கள் ஆண்டு தோறும் ஜூலை மாதம் தொடத்தில் மொய் விருந்து நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நலிவடைந்த நிலையில் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் தங்களை மேம்படுத்திக்கொள்ள இதை நடத்துவது வழக்கம்.

அதன் படி இந்தாண்டு வடகாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்த மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த விருந்தில் 20 இடங்களில் மொய் எழுதப்பட்டது. இதற்கான தனியார் வங்கி அலுவலர்கள் பணம் எண்ணும் கருவிகளோடு வந்திருந்தனர். துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அதன்படி, இந்த விருந்தில் கலந்துக் கொள்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் செலவில் 1 டன் ஆட்டுக் கறியுடன் விருந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ.4 கோடி மொய் விருந்துத் தொகை வசூலானது.

இந்த செய்தி மாநிலம் முழுவதும் அதிகமாக பரவியது. மேலும் நடப்பு நிகழாண்டில் ஒரு தனிநபருக்கு வசூலான அதிகபட்ச மொய் தொகை இதுவாகும் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மொய் விருந்தில் வசூலான நான்கு கோடி : திருட வந்து மாட்டிக்கொண்ட திருடர்கள்.. தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள் !

இந்நிலையில் தொழில் செய்வதற்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக, மொய் விருந்தில் வந்த பணத்தை வங்கிகளில் செலுத்தாமல் தன் வீட்டிலேயே கிருஷ்ணமூர்த்தி வைத்துள்ளார். இதை அறிந்த திருடர்கள் நேற்று அவர் வீட்டிற்கு இரவுச் சென்று பணம் இருக்கும் இடத்தை தேடியுள்ளனர்.

தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ண மூர்த்திக்கு திடீரென ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அப்போது கண் விழித்துப் பார்க்கும்போது நான்கு நபர்கள் இருட்டில் நின்று கொண்டிருந்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி யார் என கேட்டு சத்தம் எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இந்த கிராம மக்கள் கூச்சலிட்டு திருடர்களைப் பிடிக்க விரைந்துள்ளனர். உடனே அங்கிருந்து நான்கு பேரும் தப்பித்துள்ளனர். அப்போது ஒருவர் அருகில் உள்ள சோளக் காட்டில் பதுங்கியுள்ளார்.

அவரை கண்டுபிடித்த பொதுமக்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். மொய் விருந்தில் வசூலான நான்கு கோடியை திருட முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories