கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், திருநங்கை அமிராமி. இவர் தன் வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் அய்யன் கோவில்பட்டியில் சக திருநங்கைகளுடன் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 16ம் தேதி திருச்சி - சென்னை தேதிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்ரோட்டில் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் அபிராமி இறந்துகிடந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமணைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே போலீசார் இது குறித்த விசாரனையை தீவிரபடுத்த தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரனை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பல திடுகிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருநங்கை அபிராமியின் சொந்த ஊரில் விசாரணை மேற்கொண்டபோது, கீராமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரருக்கும், அபிராமிக்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திருமணத்திற்கு ராணுவ வீரரின் தங்கை திருநங்கை புனிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருநங்கை புனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரனையில் புனிதாவின் சகோதரர் அபிராமிக்கு வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த புனிதா, மற்றொரு திருநங்கைக்கும் அபிராமிக்கும் இருந்த முன்விரோதத்தை சாதகமாகப் பயன்படுத்தி அபிராமியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதற்காக மற்றொரு திருநங்கையுடன் கூட்டு சேர்ந்து, ஆண் நண்பர்கள் மூன்று பேரை உதவிக்கு அழைத்துள்ளனர். மூன்று திருநங்கைகளும், மூன்று ஆண்களும் திட்டமிட்டு அபிராமியைக் கொலை செய்துள்ளார்கள்.
தற்போது போலிஸார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மற்றொருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.