தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கை பற்றி கருத்து சொன்ன சூர்யா, ரஜினியை அமைச்சர்கள் மிரட்டுவது ஏன்? : சு.வெங்கடேசன் கேள்வி

புதியக்கல்வி கொள்கை கருத்து தெரிவிக்க சொல்கிறீர்களா அல்லது ஆதரவு தெரிவிக்க சொல்கிறீர்களா என்று மக்களவையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

புதிய கல்வி கொள்கை பற்றி கருத்து சொன்ன சூர்யா, ரஜினியை அமைச்சர்கள் மிரட்டுவது ஏன்? : சு.வெங்கடேசன் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்திய பா.ஜ.க அரசு, தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்க வரைவு அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளியிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மக்களவையில் இன்று பேசினார்.

அப்போது பேசிய அவர், ''தேசிய கல்விக் கொள்கை மீது கருத்து தெரிவிக்குமாறு அரசு அறிவித்திருந்தது. 484 பக்க அறிக்கை மீது ஒரு மாதத்திலேயே எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்று எதிர்க் கட்சிகளும் , கல்வியாளர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசு மேலும் ஒரு மாதம் கால நீட்டிப்பு செய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நடிகர் சூர்யா அவர்கள் கல்விக் கொள்கை குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டு இருந்தார் . அதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சூர்யா வன்முறையைத் தூண்டுகிறார் என்று கூறுகிறார் . சூர்யா அவர்களுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கருத்துக்களை பதிவிட்டு போது ஆளும் கட்சியைச் சார்ந்த இன்னொரு தலைவர் ரஜினிகாந்த் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குகிறார் என்று கூறுகிறார். மற்றொரு தலைவரோ வெளிப்படையாக மிரட்டுகிறார்.

நான் அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் கருத்து தெரிவிக்க சொல்கிறீர்களா?அல்லது ஆதரவு தெரிவிக்க சொல்கிறீர்களா? ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கருத்துச் சொன்னால் போதும் என்று வெளிப்படையாக அறிவியுங்கள். கருத்துத் தெரிவிப்பதாக இருந்தால் அதைக் கேட்கிற காதும், அதை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையும் இருப்பதை இந்த அவையில் உறுதி செய்யுங்கள்'' இவ்வாறுக் கூறினார்.

banner

Related Stories

Related Stories